பால்மா விலைகளை குறைப்பதற்கு இலங்கையின் பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த விலை குறைப்பை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக பால் மா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 200 ரூபாவாலும் 400 கிராம் பால் மாவின் விலை 80 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் பால்மா விலை குறைவடைந்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.