January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐஎம்எப் அனுமதி: இரண்டு நாட்களில் இலங்கைக்கு நிதி!

நீடித்த நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்மூலம் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் இலங்கைக்கான தூதரகத் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் இது தொடர்பில் 20 ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி இது தொடர்பில் அறிவித்திருந்தனர்.