
பண்டாவளை – பூனாகலை கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதேவேளை இந்த மண்சரிவில் சிக்கி 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 ஆம் திகதி இரவு குறித்த பகுதியில் பெய்த அடைமழையின் போது இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் இரண்டு லயன் குடியிருப்புகள் உள்ளிட்ட 40 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்களில் இருவர் கொஸ்லந்த வைத்தியசாலையிலும், இருவர் தியதலாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை மண்சரிவால் பாதிக்கப்பட்ட 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.