உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை கிடைத்ததும், அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதனால் ஏப்ரல் 25 தேர்தல் நிச்சயமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்பதனை கூற முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி இதனை கூறியுள்ளார்.