நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாம் மின் உற்பத்தி இயந்திர கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த இயந்தி கட்டமைப்பின் ஊடாக மின் உற்பத்தியை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர், குறித்த இயந்திரத்தில் எதிர்வரும் ஏப்ரலில் பாரிய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கவிருந்த நிலையில் இவ்வாறு கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கும் என்றும், இதனால் மின்வெட்டு அமுலாகாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.