January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”காலத்துக்கு முந்தியே வளர்ந்த புரொய்லர் கோழி”: நாமல் குறித்து வீரவன்ச

File Photo

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ அரசியல் அறிவு இல்லாதவர் என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் நடந்த நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ என்பவர் அரசியல் அறிவு அற்றவரே. அவர் அரசியல் அறிவோ அனுபவமோ இல்லாத காலத்திற்கு முந்தியே வளர்ந்த புரொய்லர் கோழியை போன்றவர் என்று வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

ரணிலை போன்று செயற்பட முயற்சிக்கும் நாமல் ராஜபக்‌ஷவின் செயற்பாடுகளும் ராஜபக்‌ஷக்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.