அரச பணியில் சேவையாற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான தேர்வுப் பரீட்சை மார்ச் 25 ஆம் திகதி நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 341 நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெறும் என்று கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களின் பற்றாக்குறைக்கு தேவையான பட்டதாரிகள் கணக்கிடப்பட்டு அந்த வெற்றிடங்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக மூவாயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.