இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 12 ரூபாவினாலும், விற்பனை விலை 8 முதல் 12 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.
இதன்படி நாட்டின் அங்கீகாரம் பெற்ற சில தனியார் வங்களில் டொலர் ஒன்றின் கொள்வவு விலை 320 ரூபாவாகவும், விற்பனை விலை 336 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் டொலரின் பெறுமதி பெருமளவில் குறைவடைந்திருந்த நிலையில், கடந்த தினங்களில் மீண்டும் கட்டம் கட்டமாக அதன் பெறுமதி அதிகரித்து செல்கின்றது.
இதேவேளை கடந்த வாரத்தில் குறைவடைந்திருந்த தங்கத்தின் விலையும் மீண்டும் நேற்று அதிகரித்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.