January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழிற்சங்க போராட்டம் 15 ஆம் திகதி நாட்டை முடக்குமா?

அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து மார்ச் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளன.

வரி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டணி தெரிவித்துள்ளது.

இதன்படி அன்றைய தினம் போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, பெருந்தோட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், இதனால் அன்றைய தினத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.