
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் ஹுசைன் இலங்கை வந்திருந்த போது, நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கிலேயே வீரவன்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வீரவன்ச ஆஜராகியிருக்கவில்லை.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்திருந்த போது, கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்திற்கு முன்னால் வீதியை மறித்து இடையூறுகளை ஏற்படுத்தியதாக வீரவன்ச மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.