
டொலரின் பெறுமதி குறைவடைந்து வரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் இலங்கை சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவடைய வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
டொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு எரிபொருள் விலை குறைவடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை மாத்திரமன்றி பொருட்களின் விலைகளும் விரைவில் குறைவடையும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை எதிர்வரும் ஜுன் மாதமளவில் குறைக்க முடியுமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.