February 28, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

உள்ளூராட்சி தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலில் வேட்பாளர்களாக அரச ஊழியர்கள் போட்டியிடுவார்களாக இருந்தால் அவர்கள் தேர்தல் முடிவுடையும் வரையில் சம்பளமற்ற விடுமுறையை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

இந்நிலையில் மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தமையினால், மார்ச் 10 ஆம் திகதி வரையிலேயே ஆரம்பத்தில் அவர்கள் விடுமுறையை பெற்றிருந்தனர்.

ஆனால் தேர்தல் ஏப்ரல் 25 வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் விடுமுறை தொடர்பில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல் முடிவடையும் வரையில் அரச ஊழியர்களுக்கு பணிகளில் இணைய முடியாது என்றும், இதனால் அவர்களின் குடும்ப பொருளாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு, மார்ச் 9 ஆம் திகதி முதல் தேர்தல் முடிவடையும் வரையில் அடிப்படை சம்பளத்தை மாத்திரமாவது வழங்கும் வகையில் ஏற்பாடுகளை செய்யுமாறு, பொதுநிருவாக அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.