
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான கியூஆர் முறை தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி இதுவரையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிமை நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படும் எரிபொருள் கோட்டா அளவு, இனி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதலே புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதேவேளை இந்த முறையின் ஊடாக வாராந்தம் வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.