
மார்ச் 8 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கு பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி ஒருகிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மார்ச் 8 நள்ளிரவு முதல் பாணின் விலை குறைக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய 10 ரூபாவினால் பாண் இறாத்தல் ஒன்றின் விலை குறைவடையும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.