
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 317.77 ரூபாவாகவும் விற்பனை விலை 331.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களில் இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி 30 ரூபாவை விடவும் அதிகளவில் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.