
இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி குறைவடைந்து வரும் நிலையில், கொழும்பு செட்டியார் தெருவில் தங்கம் விலையும் குறைவடைந்து வருகின்றது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரத்தில் தங்கத்தின் விலை 18,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 153,500 ரூபாவாகவும், 24 கரட் பவுன் ஒன்றின் விலை 166,000 ரூபாவாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் ஏப்ரல் மாதத்தின் பின்னர் தங்கத்தின் விலை 185,000 – 190,000 ரூபா வரையில் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.