
உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், தேர்தலுக்கு போதுமான நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தலுக்கான நிதியை வழங்காது தடுத்து வைத்திருப்பதை இடைநிறுத்தி கடந்த வாரத்தில் நிதி அமைச்சுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதனை தொடர்ந்து இன்றைய தினத்தில் கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கு முடியுமாக இருக்குமென்று அறிவித்துள்ளது.