எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த எம்.பிக்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் வாரமளவில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதுடன், இதன்போது அவர்கள் அரசாங்கத்தில் இணைய பேச்சுக்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த குழுவொன்றை இணைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் புதிய கூட்டணியொன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரத்தில் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.
இதேவேளை, நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன, தற்போதைய நிலைமையில் தேர்தல் அவசியமில்லை என்றும், நாட்டு மக்களுக்காக சுகாதார அமைச்சுப் பதவியை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.