கொழும்பின் சில பகுதிகளில் மார்ச் 4ஆம் திகதி பிற்பகல் முதல் 24 மணிநேர நீர்வெட்டு அமுலாகவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி வரையில் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு 01 முதல் 04 வரையும், கொழும்பு 07 முதல் 11 வரையுமான பகுதிகளில் கடுவலை, கொலன்னாவை நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தையிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பிரதான நீர்விநியோக கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாக இவ்வாறாக நீர்வெட்டு அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.