November 26, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று நிலவரப்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 362 95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 352.72 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

2022 மே 4 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.