உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்குரிய வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் அறிவித்துள்ளது.
தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் சிக்கல் நிலமைகளை கருத்திற்கொண்டும், வாக்குச்சீட்டுகளை அச்சிட தேவையான பணம் கிடைக்காமையினாலும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரையில் அச்சிட்ட வாக்குச்சீட்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் உள்ளூராட்சி தேர்தல் தினம் தொடர்பில் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.