துறைமுகம், போக்குவரத்து உள்ளிட்ட சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
பெப்ரவரி 27 ஆம் திகதி இரவு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படட்டுள்ளது.
இதற்கமைய, துறைமுகத்தினுள் இருக்கும் கலத்திலிருந்து உணவுப் பொருள், பானம், நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் என்பவற்றை வெளியேற்றுதல், கொண்டு செல்லல், தரையிறக்குதல், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல், அகற்றுதல் ஆகியவற்றுக்காக தெருக்கள், பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில் பாதைகள் உள்ளிட்ட வீதியூடான, ரயில் மூலமான அல்லது வான் மூலமான போக்குவரத்துச் சேவைகளுக்கான வசதிகளை வழங்குதலும் பேணுதலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.