பிரதமர் தினேஸ் குணவர்தன பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் வகையில், தினேஸ் குணவர்தன பதவி விலகவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தவொரு தரப்பினராலும் கோரப்படவில்லை அல்லது அழுத்தம் கொடுக்கப்படவில்லை என பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இவ்வாறான செய்திகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் சதியின் ஒரு பகுதியே இது எனவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.