November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனுர உள்ளிட்ட 26 பேருக்கு கொழும்பில் சில இடங்களுக்குள் நுழையத் தடை!

ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையில் கொழும்பில் சில பிரதேசங்களுக்குள் நுழைவதற்கு கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினர் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ள நிலையிலேயே நீதிமன்றம் இந்தத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு எதிராகவே இடைந்த தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இதன்படி, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் வளாகம் உள்ளிட்ட பல பெயரிடப்பட்ட இடங்களுக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு இவர்களுக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொலிஸார் விடுத்த வேண்டுகோளை அடிப்படையாகக் கொண்டே நீதிமன்றத்தினால் இவர்களுக்கு எதிராக தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.