2022 மே 9 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்கும் முயற்சியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு இருக்குமாக இருந்தால் தான் மீண்டும் பதவியேற்க தயார் என்று மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்படி கூடிய விரைவில் அவர் பிரதமர் பதவியை ஏற்கலாம் என்றும், இதற்காக தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்தன பதவி விலகலாம் என்றும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், தமது உறுப்பினர்களிடம் ஆதரவு கோரியதாக சுதந்திர மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அரசாங்கமே வீடு செல்ல வேண்டும், அதனை விடுத்து பிரதரை மாற்றுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது எனவும் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.