January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் போராட்டத்திற்கு திட்டமிடும் ஜே.வி.பி!

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.

இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் தமது ஆதரவாளர்களை அணி திரட்டி போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தமது ஆதரவாளர்களை கொழும்புக்கு வருமாறு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனால் கொழும்பில் அரச கட்டடங்கள் மற்றும் அரச அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.