November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விசாரணை ஒத்தி வைக்கப்பட்டாலும் தேர்தலுக்கு தடையில்லை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை மே 9 ஆம் திகதி வரையில் உயர்நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் எம். ஆர். விஜேசுந்தரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அதனை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

எனினும் குறித்த காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்துவதற்கு எந்தவித தடைகளையும் நீதிமன்றம் விதிக்கவில்லை.

தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உரியது என்று ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அந்த அறிவித்தல் அவ்வாறே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி போதுமான நிதி கிடைக்குமாக இருந்தால் குறித்த காலத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தலை நடத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.