
இலங்கையில் மின்கட்டணங்கள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் பல திட்டமிட்டுள்ளன.
அந்த வகையில் பெப்ரவரி 20 ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
இதேவேளை 19 ஆம் திகதி இரவு வீடுகளில் மின்குமிழ்களை அணைத்து போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு மின்சார பாவனையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இரவு 7 மணி முதல் 10 நிமிடங்களுக்கு மின் குமிழ்களை அணைத்து அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று அந்த சங்கம் அறிவித்துள்ளது.