February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!

மின் கட்டண அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் உணவுகளின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதன்படி கொத்து ரொட்டி, சோறு பார்சல் மற்றும் பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.