November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின் கட்டணங்கள் பெருமளவில் உயர்வு: இனி மின்வெட்டு இல்லை?

Electricity Power Common Image

பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணங்களை 66 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டிருந்த மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு நேற்றைய தினத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியதாகவும், இதன்படி மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண அதிகரிப்புக்கு அமைய 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணம் 276 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கு இதுவரை அறவிடப்பட்ட 680 ரூபா மின் கட்டணம், 2560 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.
30 அலகுகள் பயன்பாட்டை கொண்ட வீடொன்றிற்கு இதுவரை காணப்பட்ட 360 ரூபா மின் கட்டணம், 1300 ரூபா வரை அதிகரிக்கப்படும்.

90 அலகு பயன்பாட்டிற்காக இதுவரை அறவிடப்பட்ட 1800 ரூபா மின் கட்டணம், புதிய திருத்தத்திற்கு அமைவாக 4430 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

200 அலகுகளுக்கும் மேற்பட்ட மின்சார பாவனையை கொண்ட வீடுகளுக்காக மின் கட்டணம் 32 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.