November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீதிக்கு இறங்கும் எதிர்க்கட்சித் தலைவர்!

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகளுக்கு எதிராக வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று கூடிய போது இந்தத் தீர்மானம் எடுத்துள்ளது.

தேர்தலை ஒத்தி வைக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், மக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பதற்கு அந்தக் கட்சித் தீர்மானித்துள்ளது.