உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் தபால் மூல வாக்கெடுப்பு காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கும் எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் அரச அச்சகத்திற்கு போதுமான நிதி கிடைக்காமையினால் வாக்குச் சீட்டுகளை அச்சிட முடியாது என்று அச்சக பிரதானியால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தபால் மூல வாக்கெடுப்பை ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த தேர்தல்கள் ஆணைக்குழுவினர், ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் விபரித்துள்ளனர். இதனை தொடர்ந்து தபால் மூல வாக்கெடுப்பை ஒத்தி வைப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.