February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு நெல் அறுவடை நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி!

இலங்கைக்கு உணவு வழங்கக்கூடிய மாகாணமாக வட மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பரந்தன் வயல்வெளியில் நடைபெற்ற வடக்கு நெல் அறுவடை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

பரந்தன் வயல்வெளிக்கு சென்ற ஜனாதிபதி, அங்குள்ள விவசாயிகளிடம் நெற்செய்கை தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன், அப்பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இம்முறை பெரும் போகத்தில் மேலதிக நெல் அறுவடை கிடைக்கும் என நம்புகிறோம். அதற்கமைய ஒரு கிலோ நெல்லை 100 ரூபா உத்தரவாத விலைக்கு அரசாங்கத்தின் ஊடாக கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தையும் வடமாகாணத்தையும் மீண்டும் நாட்டிற்கு உணவளிக்கும் அளவுக்கு அறுவடை செய்யக்கூடிய மாகாணமாக மாற்றுவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம். இதற்கு மேலதிகமாக கால்நடை தீவன உற்பத்தியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் வடமாகாண அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் கிளிநொச்சி பன்னம்கட்டி கிராம வயல்வெளிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்குள்ள விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்ததோடு அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

This slideshow requires JavaScript.