File Photo
கடந்த தினங்களில் மூன்று தடவைகள் நில அதிர்வுகள் பதிவான இலங்கையின் புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளில் ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி பிற்பகல் புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக இரண்டு தடவைகள் நில அதிர்வுகள் பதிவாகியிருந்தன.
இதனை தொடர்ந்து 11 ஆம் திகதி மற்றுமொரு நில நடுக்கம் பதிவாகியிருந்தது. இது ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாகியிருந்தது.
இதனை தொடர்ந்து புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் இரண்டு ஆய்வுக்குழுக்கள் அந்தப் பகுதிக்கு களப்பயணம் மேற்கொண்டுள்ளன.
மக்களிடம் தகவல்களை சேகரிக்கும் அந்தக் குழுக்கள் அந்த பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நிலங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேவேளை கடந்த வருடங்களிலும் குறித்த பிரதேசங்களில் இதுபோன்று நில அதிர்வுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.