November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேர் கைதாகி விடுவிப்பு!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினா் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு நேற்றுஅழைப்பு விடுத்திருந்தது.

இந்தப் போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவை பெற்றிருந்த போதும், அதனையும் மீறி போராட்ட பேரணி நடத்தப்பட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் சட்டத்தரணி க.சுகாஸ் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து இவா்கள் நேற்று இரவு 11 மணியளவில் யாழ்.பதில் நீதிவானின் வாசஸ்தலத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்ட நிலையில், இவர்கள் 18 பேரையும் தலா 3 லட்சம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.