
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்க அவரின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் அவரை பிரதமராக அறிவிக்க முயற்சிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இதன்படி தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்தன விரைவில் பதவி விலகுவார் என்றும் செய்திகள் வெளியாகின்றன.
ராஜபக்ஷக்களுக்கு எதிரான போராட்டம் காரணமாக கடந்த வருடம் மே 9 ஆம் திகதி மகிந்த ராஜபாக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
தற்போது போராட்டங்கள் ஓய்ந்துள்ள நிலையில், அடுத்த தேர்தல்களை இலக்காக கொண்டு மீண்டும் மகிந்தவை பிரதமராக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.