File Photo
மொனராகலை – புத்தள பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவில் 3 மெக்னிடியூட் ஆக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12:11 மணியளவில் பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் அமைந்துள்ள நில அதிர்வு பதிவு நிலையங்களில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
புத்தளவுக்கு மேலதிகமாக வெல்லவாய மற்றும் ஹந்தபானகல பிரதேசங்களிலும் இந்த நில அதிர்வு நிலை உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் புவியியல் ஆய்வு மையம் ஆராய்ந்து வருகின்றது.
இதேவேளை, நிலநடுக்க நிலைமை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சப்பட வேண்டாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையத்தின் தகவலின் படி, இந்திய பெருங்கடலில் இரண்டு அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும், அந்த அதிர்வே இலங்கையில் குறிப்பிட்ட பகுதிகளில் உணரப்பட்டிருக்காலம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.