உள்ளூராட்சி தேர்தலை இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தினால் பெப்ரவரி 23 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுக்கள் இன்று நீதிமன்றத்தினால் ஆராயப்பட்ட போது, அவற்றை குறித்த தினத்தில் விசாரணைக்காக எடுத்துகொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை தேர்தல் நடவடிக்கைகளை தொடருமாறு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பு என்றும், இதனால் இந்த விடயத்தில் தங்களால் உத்தரவிட முடியாது என்று அறிவித்தே நீதிமன்றம் குறித்த மனுக்களை நிராகரித்துள்ளது.