File Photo
மலையக மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்ககளை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக, இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் பற்றி நமது மக்கள் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி தனியாக பேச வேண்டும் என நான் வலியுறுத்தி வந்த நிலையில், அவரின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி இதனை உரையுடன் நிறுத்தி விடாமல், அவர் நடைமுறையில் செய்து காட்டவேண்டும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் 8 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்த கூறுகையிலேயே மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.
”எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முழுமையான உரை தொடர்பாக எமது கருத்துகளை நாம் பாராளுமன்றத்தில் வெளியிடுவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.