November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்து விவாதம் நடத்த முடிவு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் 8 ஆம் திகதி முன்வைக்கப்படவிருக்கும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்து இரண்டு நாட்களுக்கு சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஜனாதிபதி தலைமையில் புதிய பாராளுமன்ற கூட்டத் தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அதன்போது ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டு உரைநிகழ்த்தப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து 9 ஆம் திகதி வியாழக்கிழமை முற்கபகல் 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடறவிருப்பதுடன், நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி மற்றும் பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் தொடர்பாக கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த 51 பிரேரணைகளை அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அன்றைய தினமும், மறுநாளும் ஜனாதிபதியின் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.