January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெப். 4 வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்!

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்தப் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழில் வியாழக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய மாணவர் ஒன்றியம், இலங்கையின் சுதந்திர தினத்தை தாம் காரிநாளாக பிரகடனப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் பெப்ரவரி 4ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும், இதற்கு ஆதரவளிக்குமாறு அங்குள்ள மக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.