January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் கடமைகள் மற்றும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களிடம் இருந்து தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதன்படி தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெறும் வாக்காளர்கள் குறித்த தினங்களில் அரச நிறுவனங்களில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியும்.

இதேவேளை உள்ளூராட்சி தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.