
உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை நிறைவடையும் வரை, மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என மின்சார சபை அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில் இன்று குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மின்சார சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நிறைவடையும் வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படக்கூடாது என வழங்கப்பட்ட உத்தரவை இலங்கை மின்சார சபை மீறியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்நிலையில் இலங்கை மின்சார சபையின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித இஹலஹேவா மனு மீதான பரிசீலனை நிறைவடையும் வரை, மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.