2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் இணையத்தின் ஊடாக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி பரீட்சைகள் திணைக்களத்தின் www.onlineexams.gov.lk அல்லது www.doenets.lk என்ற இணையத்தம் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.
பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர்கள் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை எதிர்வரும் மேமாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது