வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் பெப்ரவரி முதலாம் திகதி இலங்கையின் கிழக்கு கடற்பகுதியை அண்மிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இதனால் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு உள்ளிட்ட மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் பலத்த மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்போது சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் இது தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.