உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறுமென வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறுமென அறிவித்து 25 மாவட்டங்களுக்கும் தனித் தனியாக வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளின் ஊடாக இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளது.
25 மாவட்டங்களிலும் 339 உள்ளூராட்சி சபைகளுக்காக 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயாதீன குழுக்களின் சார்பாக 80,720 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.