February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வசந்த முதலிகே குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை!

File Photo

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுதலை செய்வதாக அறிவித்த நீதிமன்றம், அவரை விளக்க மறியலில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி வசந்த முதலிகே கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த இவர், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.