அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சி நேர்காணலொன்றில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி 2030 வரையில் ஜனாதிபதியாக ரணில் தொடர்வார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தானும் களமிறங்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக தான் களமிறங்குவேன் என்று மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.