February 28, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுதந்திர தினம் தொடர்பில் கூட்டமைப்பு எடுத்த முடிவு!

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சுதந்திரத் தினத்தை புறக்கணிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தமிழ் மக்களுக்கு உரிய முறையில் இன்னும் சுதந்திரம் கிடைக்காமையினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள, பௌத்த மக்கள் தமக்கு சுதந்திரம் கிடைத்ததாக நினைத்த போதும், இப்போது அவர்களும் தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதனை புரிந்துகொள்கின்றனர் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பெப்ரவரி 4ஆம் திகதி 75வது சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினத்தில் கறுப்பு பேரணிகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள என அவர் குறிப்பிட்டுள்ளார்.