February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிகரிக்கும் காற்று மாசு: இலங்கையில் விடுக்கப்படும் எச்சரிக்கை!

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட நகரங்கள் பலவற்றில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக காற்றில் தூசித் துகள்களின் அளவு அதிகரித்துள்ளமையை காணக் கூடிதாக உள்ளதாகவும் இது தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் புதுடில்லியில் வளிமண்டலத்தில் தூசித் துகள்களின் அளவு அதிகரித்துள்ள நிலையில், அது காற்றின் ஊடாக இலங்கைக்கும் பரவியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் சுவாச நோய்கள் ஏற்படக் கூடும் என்றும், இதனை தவிர்க்க முகக்கவசங்களை அணியுமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.